Wednesday, August 1, 2018

இரவு நேரம்.
மணி நள்ளிரவு 1.40.

பாட்டு மொபைல்போன் சார்ஜ் இல்லாமல் நின்று போனது.

நிசப்தம்.

நிமிர்ந்து காற்றாடி சுத்துவதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.மறுபடியும் நேரம் சிறுதுதான் கடந்து இருந்தது.இப்பொழுதெல்லாம்  அவ்வப்பொழுது அவளுக்கு வயிற்றுக்குள் ஏதோ கலவரம் ஏற்படுவது போல் இருந்தது. வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஒரு பக்கமாக ஒருக்களித்து படுத்துக்கொண்டாள் மறுபடியும். கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள். ஏதோ நினைவலைகள் மறுபடியும் மறுபடியும் வந்து கொண்டே இருக்க தொண்டை விக்கி அடைத்துக் கொண்டது.
எச்சிலை கஷ்டத்துடன் விழுங்கிம்போது பெரும் துக்கம் ஒருவித மனவலியுடன் வர இடையில் கண்ணீர் தாரை தாரையாய்
கண்களில் இருந்து வழிந்து கொண்டு இருந்தது.சத்தம் வெளியில் தெரியாமலிருக்க வாயை அழுத்தமாகப் பொத்திக் 
கொண்டாள்.

அதற்கு மேலும் முடியாமல் போக எழுந்து மிகவும் வேகமாக பைத்தியம் பிடித்தார்ப் போல் எங்கோ ஓடலானாள்.
ஏதோ ஒரு வேகம் அந்த நினைவலைகள் அவளைத் துரத்துவது போன்று காட்டில் உள்ள மரங்களுக்கு இடையில் ஓடினாள்.
அந்த நினைவுகள், நிம்மதி தராமல் அவளை வாட்டி எடுக்கும் நினைவுகள்.எல்லாவற்றையும் உதறுவது போல் மேலே கைகளைக் கொண்டு உதறிவிட்டுக் கொண்டே ஓடலானாள். வெகு தூரம் சென்றவுடன் பதற்றத்துடன் மூச்சிரைத்து கீழே விழப் போக யாரோ இடையில் அவளை பிடித்து தடுத்த மாதிரி இருந்தது.

அவன்தான்.

அவளின் நினைவலைகளுக்குச் சொந்தக்காரன்.அவளுக்கு சோர்வாகி மூச்சிரைத்தது.ஏதோ அவன் காதில் சொல்லப் போக,அவன் அணைத்துக் கொண்டு, "ஷ், அமைதியாக இரு,எதுவும் சொல்ல வேண்டாம், இப்பொது உனக்குத் தேவை நிம்மதியான தூக்கம். தூங்கு என்று சொல்ல,அவள் அவனின் பிடியில் இருந்து தப்ப முயன்றாள்,அவன் நினைவிலிருந்து விடுபடுவது போல.

ஆனால் அவனது பிடியோ இருப்புப் பிடியாக இருந்தது அவன் அன்பைப் போல. மேலும் தொரடலானான். உன்னை விட்டு எங்கும் செல்ல மாட்டேன்.இங்கயே உன்னோடு இருக்கிறேன்,அமைதியாக தூங்கு என்று.கூறினான்.அவளாலும் அதற்கு மேல் முடியவில்லை. நினைவுகளின் சோர்வில் அவளது கண்கள் அயற்சியில் தள்ளாட அவனது மேல் சாய்ந்தாள்.

அவள் தூங்கியபோது அவள் கண்ணீரால் ஈரமாகி இருந்தது,அவன் வாங்கித் தந்த தலையணை முழுவதும்.





 



3 comments:

Unknown said...

nice akka :)

Unknown said...

Nice akka :)

Aruna said...

Nice ma👏👏👏. I am also having a pillow like this but it's my son's pillow.