அலுவலகம் முடிந்து பேருந்திற்காய் காத்துக்கொண்டு இருக்கையில், வரிசையாக மூன்று பேருந்துகள் வர, அதில் ஒரு பேருந்து மட்டும் சற்றுத் தள்ளி முன்னாடி போய் நிற்க,அதைக் கண்டவுடன் எனது அருகில் இருந்த பெண்மணி பதட்டத்தோடு அதைப் பிடிக்க வேண்டும் என்று ஓடிக்கொண்டிருக்க, இதைப் பார்த்து எனக்கும் ஆர்வம் மேலிட கடவுளே எப்படியாவது அந்தப் பெண்மணி ஏறிவிட வேண்டும் என்று மனதில் வேண்டிக்கொண்டிருக்க, அவர்கள் ஏறியவுடன், அப்பாட என்று பெருமூச்சு விட்டுகொண்டிருக்கும் போதே நான் போக வேண்டியப் பேருந்து என்னைக் கடந்து சென்றது அதுவும் காலியாக - அடடடடா பஸ் போச்சே!!