மௌனமாய் ஒரு தவம்!!
உனது உணர்ச்சிகளை
மௌனம் என்னும் தவத்தால்
என்னுள் விதைக்கப் பார்க்கிறாய்!!
உன் கண நேர மௌனம்
காற்றின் வழியாய் தூதனுப்பி
என் உயிருக்குள் இழையோடி
நாம் கதைத்த தருணங்களை
பதம் பார்த்து படபடக்க வைக்கின்றது
உன் ஒவ்வொரு பெருமூச்சும்
எனக்கு கதை சொல்கிறது உனக்குள்
நான் உறைந்த தருணங்களை!!
உனது உணர்ச்சிகளை
மௌனம் என்னும் தவத்தால்
என்னுள் விதைக்கப் பார்க்கிறாய்!!
உன் கண நேர மௌனம்
காற்றின் வழியாய் தூதனுப்பி
என் உயிருக்குள் இழையோடி
நாம் கதைத்த தருணங்களை
பதம் பார்த்து படபடக்க வைக்கின்றது
உன் ஒவ்வொரு பெருமூச்சும்
எனக்கு கதை சொல்கிறது உனக்குள்
நான் உறைந்த தருணங்களை!!