Wednesday, August 7, 2013

அன்பும் பாசமுமாய்!!

காட்சி 1 - அந்த நடுத்தர வயது மனிதர் தொலைவில் யாரையோ பார்த்து 
கையசைதுக்கொண்டிருந்தார்.திரும்பிப் பார்த்தேன்.அவரது மனைவி கையில் கனமான ஒரு பையோடு வந்து கொண்டிருந்தார்.அவர் அருகில் வந்ததும் அவசரமாக பக்கத்தில் வந்து  அந்தப்பையை அவர் வேண்டாம் என்று சொல்லிகொண்டிருக்கும்போதே ஒரு கையில் இல்லை உனக்கு வலிக்கும் என்று வாங்கிக் கொண்டு,மறு கையால் அவர் மனைவின் கைகளைப்பிடிதுக் கொண்டு நடக்கிறார் - அன்பு

காட்சி  2 - தனது மகனோடு இரு சக்கர வாகனத்தில் வந்து இருந்குகிறார் ஒரு வயதான பெண்மணி.இறங்கியவுடன் மகனைப் பார்த்து பார்த்து பத்திரமாப் போப்பா..என்று சொல்ல அந்தப் பையனும் சரிம்மா என்று தலையாட்டிக்கொண்டே செல்ல,அவனது தலை மறையும் வரை பார்த்துக்கொண்டே நகர்கிறார் - பாசம்.

நண்பனுக்காய் காத்துக்கொண்டு இருக்கையில் நடந்த நிகழ்வுகள்...  

எப்பொழுதும் எனது அப்பாவிற்காய் !!


மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தைச் சேர்ந்ததில்லை என்று!! - எப்பொழுதும்  எனது அப்பாவிற்காய் !!

அப்பாக்களும் பிள்ளைகளும் போகமாட்டேன் என்று அடம் பிடிக்கின்ற ஒரே இடம் பள்ளிகூடம்தான்!! - இதோ இன்று வரை அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கின்ற செல்ல மகளாய் நான்!!

இறந்த பின்னும் அப்பாக்கள் கதாநாயகனாய் வாழ்வது மகள்களின் மனதில் மட்டும்தான்!! - மகள் அப்பாவிடம் நீ மட்டும் செத்துப் போகக்கூடாது இன்னப்பா என்று சொல்லும் போது!! - இறப்பு என்ன என்பதை அனுபவப் பூர்வமாய் உணர்ந்த போது நினைத்த முதல் விஷயம்....எனக்குப் பிறகுதான் என் அப்பா என்னைப் பிரிய வேண்டும் என்பது!!!

அப்பாக்களைப் பிரியா மகள்கள் அதிர்ஷசாலிகள், மகள்களைப் பிரியா அப்பாக்கள் பாக்கியவான்கள், ஆனால் அப்படி எல்லாம் தந்து விட வாழ்கை ஒன்றும் தோழன் இல்லை!! - அலுவலகச் சோர்வில், பயணக் களைப்பில் வீட்டுக்காய் வந்து அசதியில் அப்பாவுக்கு தெரிவிக்க மறந்து விட, எவ்வளவு வேலையிலும் மறக்காமல் மணி ஆகிவிட்டால் உடனே தொலைப் பேசியில் அழைத்து பத்திரமா வந்து விட்டாயா என்று கேட்கும் போது, அப்பா மறந்து விட்டேன் என்று சொல்லும் போது , என் உயிர் அங்கேதானம்மா இருக்கிறது என்று சொல்லும் போது மகள்களின் வாழ்க்கையை அப்பாக்கள் வாழ்ந்து தீர்க்கிறார்கள் !!!

மகள்கள் கேட்டவற்றை முடிந்த வரை முடியாது என்று சொல்லிவிடக் கூடாது என்கிற வாழ்க்கைதான் அப்பாக்கள் வாழ ஆசைப்படுகிறார்கள்!! - இது வரைக்கும் கேட்காமலேயே வாங்கித் தந்துதான் எனது வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார் எனது அப்பா!!

பொருள் தேடி,பணம் தேடி மகள்களை எல்லாம் விட்டு விட்டு வெகு தூரத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கும் அப்பாக்களுக்கும்,பிரிந்து தவிக்கின்ற செல்ல மகள்களுக்கும்!! - எனது உள்ளத்தின் உணர்ச்சிகளை, எனது அப்பாவின் பாசத் தவிப்பை பிரதிபலிக்கும் இந்த தங்க மீன்கள் எனது அன்பு அப்பாவுக்காய் மட்டும் அல்ல மகள்களை உயிராய் நினைக்கும் அனைத்து அப்பாக்களுக்கும் சமர்ப்பணம்!! - Shuba Sivaraman

Photo Courtesy -   Gangadharan Samudram