Tuesday, June 28, 2016

ஏ(எ)ன் இந்த இயலாமை
ஏ(எ)ன் இந்த மௌனம்
ஏ(எ)ன் இந்த கலக்கம்

வார்த்தைகளால் வதைத்து விட்டு
வலிக்கிறதா கண்ணம்மா என்கிறாய்

கல்மிஷமில்லா புன்னகையை
உன் கண்களில் காட்டிக்
கூறிய கணம்

வலிகளை எல்லாம் விலக்கி விட்டு
விரும்பி வரப்பார்க்கிறேன்
முடியாத கணம் சில நேரம்

முடிந்த வரை உணர்வுகளை
காற்றில் கரைத்து விட்டுப்
பயணிக்கிறேன்

மறுபடியும்
கண்ணம்மாவைக் கேட்பதற்கு.