மீட்டாத வீணை ,
தருகின்ற ராகம் ,
கேட்காது பூங்காந்தாலே,
ஊட்டாத தாயின் ,
கணக்கின்ற பால் போல் ,
என் காதல் கிடக்கிறதே ,
காயங்கள் ஆற்றும் ,
தலைக்கோதி தேற்றும் ,
காலங்கள் கைகூடுதே ,
தொடுவானம் இன்று ,
நெடுவானாம் ஆகி ,
தொடும்நேரம் தொலைவாகுதே ,
கண்ணம்மா.. கண்ணம்மா.. கண்ணிலே என்னம்மா …
https://www.youtube.com/watch?v=iTsoZ4KW2Is
இப்பொழுது என்னுடைய ரிப்பீட் மோட் பாடல்.காலா படத்திலிருந்து உமா தேவின் அழகான பாடல் வரிகளில் பிரதீப் குமார் மற்றும் டீயும் சேர்ந்து பாடிய பாடல்.
பிரதீப் குமார்.
சித் ஸ்ரீராம்க்கு பிறகு நான் அடிக்கடி கேட்கக் கூடிய ஒரு பாடகர்.என்ன ஒரு மெஸ்மைரைசிங் வாய்ஸ் அது என்று அடிக்கடி வியந்து போய் இருக்கின்றேன். இரவு நேரம் என்னுடைய தூக்கத்தின் முடிவு, இடையில் யார் பாடல்கள் கேட்டாலும் இளையராஜா இசையமைப்பிலான பாடல்களிலேயே முடிந்து விடும் எப்போதும். ஆனால் இப்பொழுது எல்லாம் எப்பொழுதும் ரிப்பீட் மோடில் பிரதீப் பாடல்கள். சந்தோஷ் நாராயணனுக்கு மட்டுமே தெரிந்த ஒரு மந்திரம் இவர். எத்தனை அருமையான பாடல்களை கொடுத்திருக்கிறார். அவ்வளவு அழகான குரலில் இரவின் தனிமையில் கேட்கும் பொழுது அத்தனை கவலைகளையும் மறந்து விட்டு இசையில் நனைவதென்பது ஒரு மாயம்தான். தூக்கம் தடுமாறும் பொழுது பிளே லிஸ்ட்ஐ எடுத்து போட்டு விட்டு தூங்கி விடுவது வழக்கமாயிற்று.அதுவும் கண்ணம்மா என்று ஆரம்பிக்கும் போது அப்பாடலை விட்டு வைப்பது இல்லைதான். ப்ரதீப்போடு டீயும் சேர்ந்து அருமையாக பாடி இருக்கின்றார்கள். உமா தேவியின் அசத்தலான வரிகளில்.
"ஆசை ஒரு புல்வெளி" என ஆரம்பித்து பூ அவிழும் பொழுதில்", "வழிபார்த்துஇருதேன்", "மோகத்திரை","ஆகாசத்தை நான் பாக்குறேன்","கோடையில் மழை","காதல் கனவே","ஆகாயம் தீப்பிடித்த", "போடா போடா ", "அவள் முகம்","மாய நதி இன்று","காதலாட" என பிரதீப்பின் அத்தனைப் பாடல்களும் என்னுடைய காலெக்ஷனில் இருக்கின்றது.
இவர் சந்தோஷ் நாராயணன் மட்டும் அல்லாது சீன் ரோல்டன் மற்றும் இமான் இசையிலும் சில பாடல்கள் பாடி இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=mbd4WPPMNQo
அதே போல் எனக்கு ஆல் டைம் மிகப் பிடித்த இதயத்திற்கு நெருக்கமான பாடலான உறவுகள் தொடர்கதை பாடலையும் அழகாக யுடுபேயில் அவரது மனைவி கல்யாணி நாயருடன் சேர்ந்து பாடி இருப்பார்.
பின்குறிப்பு: ஒரு தங்கை அழைப்பின் போது, எடுத்தவுனேயே அக்கா உங்கள் பாட்டு கேட்டேனே, என்று கூற, குழப்பத்தோடு, என் பெயரில் என்ன பாட்டு இப்போது என்று நினைக்கவும், உடனடியாகக் கண்ணம்மா நினைவுக்கு வர,சிரித்துக் கொண்டே, ஆம் நான் கூட கேட்டேன்.மிக்க நன்றி டா எனக் கூறினேன். (எனது அன்பிற்க்காய் கிடைத்த அங்கீகாரம் கண்ணம்மா :) )


2 comments:
what is the meaning for பூங்காந்தாலே??
Suprb line sisy.
......
Post a Comment