Sunday, May 6, 2018






புருஷோத் - சமீபத்தில் நான் நடத்திய சம்மர் ஒர்க்ஷாப்பில்   தனது
அக்காவுடன் துணைக்கு வந்து இருந்த 4 வயது குழந்தை.

அவனை அதற்கு முந்தியே ஆனந்த பெருமாள் அண்ணன் நடத்திய ஓரிகாமி
ஒர்க்ஷாப்பில் சந்தித்து இருந்தேன். அண்ணா அவனது பெயரை கேட்டவுடன்,
பயத்தில் குழந்தை அழுது விட, அதை பார்த்துவிட்டு அவனை சமாதானம்
செய்தவுடன்  அமைதியானான். அப்பொழுது எனது பக்கத்தில் நின்று கொண்டிருந்த
அவனது அம்மா ப்ரீத்தி என்னிடம்  சொல்லிக்கொண்டிருந்தார், அவன் கொஞ்சம்
ஷய் டைப், அவனை எல்லோரிடமும் பழக வைக்க வேண்டும் என்றே இங்கு அழைத்து
வந்தேன் எனக் கூறினார். அதே போல் அந்த நாள் முடிவில் அனைவரிடமும்
மகிழ்ச்சியோடு பழக முடிந்ததை காண முடிந்தது.

முதலில் அனைவரிடமும் அவர்களை பற்றிய விவரங்களை கேட்டுக்கொண்டிருதேன்.
ப்ரீத்தி சொன்னது நினைவுக்கு வர, அவனை தனியாக இன்னொரு குழந்தையின்
பக்கத்தில் அமர வைத்தேன். அவனிடம் இம்முறை அவனை பற்றிய விவரங்களை கேட்ட
போது அழகாக சிரித்தபடி எவ்வித தயக்கமும் இல்லாமல் பதில் அளித்ததை சிறிது
ஆச்சிரியதுடன் கேட்டுக் கொண்டு இருந்தேன்.

மற்ற குழந்தைகளோடு  அவனும் வரைந்து கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தான்.
ஒர்க்ஷாப்பின் முடிவில் நான் கொடுத்த கிரையான்சை என்னிடம் வந்து கொடுக்க,
நான் அவனிடம் அதை நீயே வைத்துக்கொள் எனக் கூறிய போது, அதற்கு என்னிடம்
ஏற்கனவே வீட்டில் ஒன்று உள்ளது,அதனால் வேண்டாம் என்று கொடுக்க, அதைக்
கேட்டவுடன் பதிலுக்கு என்னால் யூகிக்க முடியாத ஒரு ரியாக்க்ஷனைத்தான்
கொடுக்க முடிந்தது.


நீங்கள் நினைக்கலாம்.இதில் என்ன இருக்கிறது என்று.அப்படி அல்ல. சிறு சிறு
விஷயங்களில் இருந்துதான் அவர்களின் எதிர்கால குணங்கள் மறைந்து
கொண்டிருக்கின்றன. கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். நாம் அவ்விடத்தில்
இருந்துருந்தால் கண்டிப்பாக பிரீயாகத்தானே கொடுக்கிறார்கள் வாங்கிக்
கொள்வோம் என்று வாங்கி இருப்போம். ஆனால் ஏற்கனவே ஒன்று இருக்கிறது, இதை
வாங்கிக் கொள்ளாமல் இருந்தால் மற்றவர்களுக்காவது உபயோகப் படுமே என்று
எத்தனை பேர்களுக்கு இந்த எண்ணம், அதுவும் இக்காலத்தில் தோன்றும் என்றால்
கொஞ்சம் கடினம்தான். இந்த எண்ணம் சுயநலமில்லாத ஒரு நல்ல குணம் இப்பொழுதே
இந்த குழந்தைக்கு இருப்பதை பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சியாக
இருக்கிறது. ப்ரீத்திக்கும் அவரது கணவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஏன் என்றால் அக்குழந்தையின் வளர்ப்பில் ஒரு பொறுப்புணர்வை அவர்களிடம் காண
முடிகிறது. நம்மிடம் இரண்டு இருந்தால் எதுவாக இருந்தாலும் அதை பகிர்ந்து
கொள்ளுங்கள் என்ற மனப்பான்மையை இப்பொழுதே குழந்தைங்களிடம் விதையுங்கள்.
இது ஒரு நல்ல சமுதார்த்திக்கான அடிப்படையாக அமையட்டும்.

புருஷோத்: இப்பொழுது வேண்டுமானால் உனக்கு நீ என்ன செய்திருக்கிறாய் என்று
தெரியாமல் இருந்து இருக்கலாம். ஆனால் வரும்காலத்தில் இதைப் படிக்கும்
போது உனக்கான பொறுப்புணர்ச்சியை நீ தெரிந்து கொண்டு நல்ல எண்ணங்களை
மேலும் வளர்த்து ஒரு நல்ல மனிதனாக இச்சமுதாயத்தில் வளர வாழ்த்துக்கள்.

ப்ரீத்தி - உங்களின் கனிவான தோற்றமும், அன்பான அணுகுமுறையும், அழகான
சிரிப்பும், உங்கள் குழந்தைகளுக்கும் தொடர என் வாழ்த்துக்கள்.

No comments: